Published : 23 Sep 2022 06:16 PM Last Updated : 23 Sep 2022 06:16 PM
யுனிசெஃப் கூறும் பெண் கல்விக்கான முக்கிய 10 காரணங்கள்
நியூயார்க்: பெண்கள் கல்வி அறிவை பெறுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்து யுனிசெஃப் 10 காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியமான யுனிசெஃப், பெண் கல்வியை வலியுறுத்தும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பெண் கல்வியை வலியுறுத்துவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதில் முக்கிய 10 காரணங்களை அது பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலை தற்போது பார்ப்போம்.
பெண்கள் தங்களுக்கான தேர்வுகளை சுயமாக தேர்வு செய்வதற்கான அதிகாரத்தைப் பெற
சுரண்டலில் இருந்தும் தவறாக நடத்தப்படுவதில் இருந்தும் கூடுதல் பாதுகாப்பைப் பெற
பாகுபாட்டை குறைவாக எதிர்கொள்ள
உரிய வயது வந்த பிறகு திருமணம் செய்துகொள்ள
குழந்தை இறப்பு குறைய
குழந்தைகள் ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்துடனும் வளர
அதிகம் பொருளீட்ட; பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை அளிக்க
சமூகத்தின் முன்னேற்றத்திற்காக கூடுதல் பங்களிப்பை அளிக்க
அரசியலில் கூடுதல் ஆர்வத்துடன் இயங்க; சமூக நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்க
WRITE A COMMENT