Published : 14 Sep 2022 02:05 PM
Last Updated : 14 Sep 2022 02:05 PM
லண்டன்: ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு வந்து சேர்ந்தது.
கடந்த 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத்,கடந்த 8 ஆம் தேதி தனது 96 வயதில் ஸ்காட்லாந்தில் மரணமடைந்தார். ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் வரும் 19-ம் தேதி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்திருக்கிறது.
மறைந்த ராணி எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தாலான சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் தலைநகரான எடின்பர்க் கொண்டு செல்லப்பட்டது.
முதலில் எலிசபெத்தின் உடல், ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் பார்வைக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டது.
இங்கிலாந்து கொண்டு வந்த ராணியின் உடல் அரசக் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணியின் இறுதிச் சடங்கு, வரும் திங்கட்கிழமை நடப்பதைத் தொடர்ந்து அதற்காக ஆயத்தப் பணிகளை அரசக் குடும்பம் தீவிரப்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT