Published : 10 Sep 2022 07:42 PM
Last Updated : 10 Sep 2022 07:42 PM
ஜெனீவா: உலகில் கண்டுபிடிப்புகளை அதிகம் நிகழ்த்தும் நாடுகளின் பட்டியலில் ஸ்விட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
புதிய புதிய கண்டுபிடிப்புகள்தான் உலகை நவீனத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. அந்த வகையில், உலகில் நிகழும் கண்டுபிடிப்புகளின் பின்னணியில் இருக்கும் சமூக, பொருளாதார காரணிகள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கிறது ஐ.நா பொருளாதார சமூக கவுன்சிலின் துணை அமைப்பான உலக அறிவுசார் சொத்து அமைப்பு.
அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள உலக அறிவுசார் சொத்து அமைப்பு, அதில், கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவதில் ஒவ்வொரு நாடும் எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தில் உயர் வருவாய் கொண்ட நாடுகள், மேல் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள், கீழ் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள், குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் என பொருளாதார ரீதியாக 4 வகையாகவும், பிராந்திய ரீதியாக 7 வகையாகவும் உலகை பிரித்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிப்புகளுக்கான உலக தரவரிசைப் பட்டியல்:
1. ஸ்விட்சர்லாந்து
2. ஸ்வீடன்
3. அமெரிக்கா
4. பிரிட்டன்
5. தென் கொரியா
6. நெதர்லாந்து
7. ஃபின்லாந்து
8. சிங்கப்பூர்
9. டென்மார்க்
10. ஜெர்மனி
11. பிரான்ஸ்
12. சீனா
13. ஜப்பான்
14. ஹாங் காங், சீனா
15. இஸ்ரேல்
இந்தியா மற்றும் அண்டை நாடுகளின் தரவரிசை:
உலக நிலப்பரப்பை 7 பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களில் உள்ள நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம்.
ஐரோப்பா:
1. ஸ்விட்சர்லாந்து
2. ஸ்வீடன்
3. பிரிட்டன்
வட அமெரிக்கா:
1. அமெரிக்கா
2. கனடா
லத்தீன் அமெரிக்கா:
1. சிலி
2. மெக்ஸிகோ
3. கோஸ்டா ரிகா
மத்திய மற்றும் தெற்கு ஆசியா:
1. இந்தியா
2. ஈரான்
3. கஜகஸ்தான்
கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியா:
1. தென் கொரியா
2. சிங்கப்பூர்
3. சீனா
வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியா:
1. இஸ்ரேல்
2. ஐக்கிய அரபு எமரிரேட்ஸ்
3. துருக்கி
துணை சஹாரா ஆப்பிரிக்கா:
1. தென் ஆப்ரிக்கா
2. கென்யா
3. தான்சானியா
அதிக வருவாய் கொண்ட நாடுகளில் முதல் 3 இடங்களில் இருக்கும் நாடுகள்:
1. ஸ்விட்சர்லாந்து
2. ஸ்வீடன்
3. அமெரிக்கா
உயர் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் முதல் 3 இடங்களில் இருக்கும் நாடுகள்:
1. சீனா
2. பல்கேரியா
3. தாய்லாந்து
கீழ் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் முதல் 3 இடங்களில் இருக்கும் நாடுகள்:
1. வியட்நாம்
2. இந்தியா
3. உக்ரைன்
குறைவான வருவாய் கொண்ட நாடுகளில் முதல் 3 இடங்களில் இருக்கும் நாடுகள்:
1. ருவாண்டா
2. மலாவி
3. மடகாஸ்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT