Published : 20 Oct 2016 03:57 PM
Last Updated : 20 Oct 2016 03:57 PM
சீனாவுடன் நிலவும் தென் சீனக் கடல் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.
தென் சீனக் கடல் பிரச்சினை தொடர்பாக சீனாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று (வியாழக்கிழமை) பிலிப்பைனஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தச் சந்திப்புக்கு முன்னதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்டுக்கு சீனாவின் சார்பில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பு குறித்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ கூறும்போது, "சீன அதிபர் ஜி ஜின்பிங்குடனான சந்திப்பு பிலிப்பைன்ஸ்- சீன உறவை மேலும் உறுதியடையச் செய்துள்ளது. மேலும், பிலிப்பைன்ஸை காலனியாதிக்கம் செய்து சுரண்டிய அமெரிக்காவுடன் இனி உறவு வைத்துக் கொள்ளப் போவதில்லை" என கூறியுள்ளார்.
முன்னதாக, தென் சீனக் கடலை நீண்ட நாட்களாக சொந்தம் கொண்டாடி வரும் சீனாவுக்கும் பிலிப்பைனஸ், மலேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.
இந்த விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்காவை ''தென் சீனக் கடலில் தங்களுக்கும், பிற நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்சினையில் அமெரிக்கா தலையிட வேண்டாம்'' என சீனா எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT