Last Updated : 19 Oct, 2016 06:21 PM

 

Published : 19 Oct 2016 06:21 PM
Last Updated : 19 Oct 2016 06:21 PM

டிரம்ப்புக்கு ஈடான அரசியல்வாதியை பார்த்ததே இல்லை: ஒபாமா கிண்டல்

குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் புலம்புவதை நிறுத்திக் கொண்டு அதிபர் தேர்தலில் கவனம் செலுத்துமாறு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவுரையுடன் சாடியுள்ளார்.

குடியரசுக் கட்சியின அதிபர் வேட்பாளர் டிரம்ப், தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரியின் மீது குற்றம்சாட்டி வருகிறார். தான் அதிபராக தேர்தெடுக்கப்பட்டால் ஹிலாரி செய்த ஊழலுக்கு அவரை சிறையில் தள்ளுவேன் எனவும் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒபாமா பேசும்போது, "நான் என் வாழ்நாளில் டொனால்டு டிரம்ப் போன்ற அரசியல்வாதியைப் பார்த்ததில்லை. அவர் ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவாக சமீப காலமாக பேசி வருகிறார். மேலும் டிரம்ப் தொடர்ந்து பிறர்மீது குற்றங்களை சுமத்தி வருவது டிரம்பின் தோல்விக்கு வழிவகுக்கப் போகிறது.

நான் டிரம்புக்கு அறிவுரை ஒன்று வழங்க இருக்கிறேன். டிரம்ப் தனது புலம்பலை நிறுத்திக் கொண்டு அதிபர் தேர்தலில் மக்களிடம் வாக்குகளை பெற கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.

மூன்றாவது விவாத நிகழ்வு

அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதி விவாத நிகழ்வு இன்று இரவு 9 மணியளவில் அமெரிக்காவின் நெவேடா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x