Last Updated : 05 Oct, 2016 04:07 PM

 

Published : 05 Oct 2016 04:07 PM
Last Updated : 05 Oct 2016 04:07 PM

சூடுபிடித்த அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் விவாதம்

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்களுக்கான முதல் விவாத நிகழ்வில் ஜன நாயக் கட்சி, குடியரசுக் கட்சியின் இரு வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விவாத நிகழ்வு செவ்வாய்க்கிழமை அமெரிக்க வர்ஜீனியா மாகாணத்தில் லாங்க்வுட் பல்கலைகழகத்தில் நடைபெற்றது. துணை அதிபர் வேபாளர்களுக்கான முதல் விவாத நிகழ்வில் ஜன நாயக கட்சியின் சார்பாக டிம் கைன்னும், குடியரசுக் கட்சியின் சார்பாக மைக் பென்ஸும் பங்கேற்றனர்.

துணை அதிபர் வேட்பாளர்களுக்கான முதல் விவாதமே மோதல் மற்றும் இடையூறுகளுடன் நடந்து முடிந்துள்ளது.

ஜன நாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கிளிண்டனுக்கும் ஆதரவாக டிம் கைன்னும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்புக்கு ஆதரவாக மைக் பென்ஸு தங்களது வாதத்தை முன் வைத்தனர்.

விவாதத்தின் முக்கிய அம்சமாக அமெரிக்காவின் பாதுகாப்பு, குடியுரிமை விவகாரம் மற்றும் பல முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது.

விவாதத்தில் பங்கேற்ற டிம் கைன், "அதிகாரமிக்க அமெரிக்க அதிபராவதற்கு முழு தகுதியும் ஹிலாரிக்குதான் உள்ளது. டொனால்டு டிரம்பை அதிபர் இடத்தில் வைப்பது என்பது மரண பயத்தைதான் தருகிறது.

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. நாங்கள் ஒவ்வொரு மணி நேரமும் சிரியாவின் போர் சூழலை கண்காணித்து வருகிறோம்" என்றார். இதற்கு இடைமறித்து பேசிய மைக் பென்ஸ் "மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ் ஆதிக்கம் அதிகரித்து வருவதை கவனிக்கவில்லையா" என்று கூறினார்.

டொனால்டு டிரம்ப் ஏன் வருமான வரி கணக்குகளை பற்றி டிம் கைன் கேட்ட போது மீண்டும் இடைமறித்த மைக் பென்ஸ் டொனால்டி டிரம்பின் புதிய வரி கொள்கைகளை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இவ்வாறு சூடு பறக்க விவாதம் நடந்து முடிந்தது.

சுமார் 90 நிமிடங்கள் அமெரிக்க துணை அதிபருக்கான விவாதம் நிகழ்வு நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x