Published : 02 Sep 2022 07:47 PM
Last Updated : 02 Sep 2022 07:47 PM

துப்பாக்கி முனையில் அர்ஜெண்டினா துணை அதிபர்... - பதறவைத்த நபர் கைது

கிறிஸ்டினாவை நோக்கிய துப்பாக்கி

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினாவின் துணை அதிபர் கிறிஸ்டினா கிர்ச்னர் நோக்கி துப்பாக்கி வைத்து பதற்றத்தை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அர்ஜென்டினா நாட்டின் துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டாஸ் கிர்ச்னரை கொல்ல முயற்சி நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அர்ஜெண்டினா துணை அதிபர் கிறிஸ்டினா அவரது விட்டிற்கு வெளியே கூடியிருந்த மக்களையும், ஆதரவாளர்களையும் சந்திக்க கையசைத்து நடந்து வந்தார். அப்போது அவரது அருகிலிருந்த நபர், கிறிஸ்டினாவின் தலையின் மீது துப்பாக்கியை வைத்து அழுத்துவார். அதிஷ்டவசமாக துப்பாக்கியிலிருந்து குண்டு வெளிப்படாததால் கிறிஸ்டினா உயிர் தப்பினார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்தக் காட்சியை ஊடகங்கள் பலவும் பதிவு செய்ததால், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

முன்னதாக, துணை அதிபர் கிறிஸ்டினா தான் அதிபராக இருந்த காலக்கட்டத்தில் பல்வேறு ஊழலில் ஈடுப்பட்டார் என குற்றச்சட்டப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. இவ்வழக்கில் அவர் குற்றவாளி என நிருபணமானால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அரசியலில் ஈடுபட நிரந்தர தடையும் விதிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே கடந்த ஒரு வாரமாக அவரது வீட்டின் முன் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x