Published : 27 Oct 2016 10:15 AM
Last Updated : 27 Oct 2016 10:15 AM
மேற்கு அன்டார்டிகாவில் உள்ள ஸ்மித் பனிப்பாறை மிக வேகமாக உருகி வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பனிப்பாறையின் தடிமன் அளவு, 7 ஆண்டுகளில் 0.5 கிமீ அளவுக்கு குறைந்திருப்பது, புவிவெப்பத்தின் அதீத தாக் கத்தை வெளிப்படுத்தும் வகையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
மேற்கு அன்டார்டிகாவில் உள்ள அமண்ட்சன் கடலில் உள்ள ஸ்மித் பனிப்பாறை, கடந்த 2002 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஆண்டுதோறும் 70 மீட்டர் (230 அடி) அளவுக்கு தடிமன் குறைந்து காணப்பட்டு வந்துள்ளது.
இதுகுறித்து சோதனைகளை மேற்கொண்ட அமெரிக்க விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஆய்வாளர் அலா கசெண்டர் கூறும்போது, ‘ஒரே யொரு உபகரணத்தின் மூலம் இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தால், இம்முடிவுகளை நான் நம்பியிருக்கவே மாட்டேன்.
பனிக்கட்டியை ஊடுருவிச் செல்லும் ராடார் மற்றும் லேசர் கதிர்கள் ஆகியவற்றின் உதவி யுடன் மேற்கொள்ளப்பட்ட இரு வேறு சோதனைகளிலும் ஒரே மாதிரியான முடிவுகள் வந்துள்ளன.
2009-ம் ஆண்டுக்குப் பிறகும் ஸ்மித் பனிப்பாறை உருகிக் கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும், அதன் தடிமன் மெது வான வேகத்தில் குறைந்து வரு கிறது. இதற்கு முன்பு மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில் ஸ்மித் பனிப் பாறையை ஒட்டிய இரு பாறை கள் ஆண்டுக்கு 12 மீட்டர் (40 அடி) அளவுக்கு உருகியது தெரிய வந்தது’ என்றார்.
மேற்கு அன்டார்டிகா மற்றும் கிரீன்லேண்டில் உள்ள பனிப்பாறை கள், கடல் மட்டத்தை பல மீட்டர் அளவுக்கு உயர்த்தக்கூடியவை. இவை முற்றிலும் உருகினால், அருகில் உள்ள பல நகரங்கள் மட்டுமல்லாது, ஆற்றங்கரையோர பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. எனினும், எத்தனை பனிப் பாறைகள், எந்தெந்த இடங்களில் எந் தளவுக்கு உருகுகின்றன என்ற தகவல்களில் போதுமான அள வுக்குத் துல்லியத்தன்மை இல்லை யென ஆய்வாளர்கள் கருது கின்றனர்.
ஸ்மித் பனிப்பாறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அதே நேரத்தில், அதன் அருகே உள்ள போப் மற்றும் கோலெர் பனிப்பாறைகள் மிக மெதுவாகவே உருகி வந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT