Published : 14 Oct 2016 01:16 PM
Last Updated : 14 Oct 2016 01:16 PM
சிரியாவில் புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்த சோதனைச் சாவடியில் கார் குண்டு வெடித்ததில் 17 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
சிரியவின் அசாஸ் நகரில் வியாழக்கிழமை இரவு துருக்கி நாட்டின் எல்லைப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டிலிருந்த சோதனைச்சாவடியில் வைக்கப்பட்ட கார் குண்டு வெடித்தது. இந்தக் குண்டு வெடிப்பில் 17 பேர் பலியாகினர்.
இந்தக் குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் அனைவருமே போராட்டக்காரர்கள். எனினும் அவர்களில் மூவர் பொதுமக்களாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ் அமைப்பினர் தொடர்ந்து சிரியாவில் புரட்சிப்படைகள் கட்டுபாட்டிலுள்ள பகுதிகளில் தாக்குதல் நிகழ்த்தி வருவகிறது. எனவே, இந்தத் தாக்குதலையும் ஐ.எஸ் அமைப்பு நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.
கடந்த அக்டோபர் 6-ம் தேதி போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டு பகுதியில் ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் போராட்டக்காரர்களில் 29 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT