Published : 21 Jun 2014 09:08 AM
Last Updated : 21 Jun 2014 09:08 AM

ஜிகாதி கொலையாளிகள் நாடு திரும்ப முடியாது- ஆஸ்திரேலிய பிரதமர் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் இருந்து இராக் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்றுள்ள ஜிகாதி கொலை யாளிகள் நாடு திரும்ப முடியாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் களமிறங்கியுள்ளனர். தங்களை ஜிகாதிகள் என்று அழைத்துக் கொள்ளும் இவர்கள், தங்கள் சொந்த நாட்டிலிருந்து சிரியா, இராக் போன்ற நாடுகளுக்குச் சென்று சண்டையில் ஈடுபடுகின்ற னர். ஆயுதப் பயிற்சியில் திறமை யான இவர்கள், போரில் ஈடுபடு பவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேலையையும் செய்கின்றனர்.

உள்நாட்டில் இருப்பவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயுதங்களைக் கையாளுவதில் திறமையானவர் கள், இதுபோன்ற சண்டைகளில் களமிறங்குவதால் உயிரிழப்பும் அதிகரிக்கிறது.

இராக் மற்றும் சிரியாவில் சன்னி முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் இருந்து ஜிகாதிகள் என்ற பெயரில் சென்றவர்கள் களமிறங் கியுள்ளனர். இவர்களுக்குதான் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் எச்சரிக்கை விடுத்துள் ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இராக் மற்றும் சிரியா சென்று காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்வதற் காக பயிற்சி எடுத்துக் கொண்டுள்ள இவர்கள் ஆஸ்திரேலியா திரும்ப வேண்டாம். அவ்வாறு திரும்பி வந்தாலும் மீண்டும் நாடு கடத்தப் படுவார்கள்.

இதுபோன்ற கொலையாளி களுக்கு ஆஸ்திரே லியாவில் நிச்சயமாக இடம் தர முடியாது. என்று அவர் கூறியுள்ளார்.

உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் ஆஸ்திரேலிய அரசு ஏற்கெனவே பலரது பாஸ் போர்ட்களை ரத்து செய்விட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பிய யூனியன் இதேபோன்ற எச்சரிக் கையை விடுத்தது. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பலர் சிரியா சென்று தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதே இதற்குக் காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x