Published : 08 Oct 2016 03:25 PM
Last Updated : 08 Oct 2016 03:25 PM
டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் முசோலினியாக இருப்பார் என அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளரான டக்ளஸ் கென்னடி கூறியுள்ளார்.
பாரீஸில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டக்ளஸ் கென்னடி டொனால்டு டிரம்ப் குறித்த கேள்விக்கு, "டிரம்பிடம் எந்த ஒரு கலச்சார பின்னணியும் கிடையாது. டிரம்பிடம் நான் என்ற அகங்காரம் மட்டுமே உள்ளது. புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அற்றவர் டிரம்ப். ஒருவேளை அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் முசோலினியாக செயல்படுவார்" என்று கூறினார்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர்களுள் ஒருவரன டக்ளஸ் கென்னடியின் புத்தகங்கள் 22 மொழிகளில் அச்சிடப்பட்டு லட்சக் கணக்கில் விற்பனையாகியுள்ளன. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு தனது ஆதரவை டக்ளஸ் கென்னடி ஏற்கெனவே வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க எழுத்தாளர்கள், நடிகர்கள் என பலரும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது டொனால்டு டிரம்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT