Last Updated : 27 Oct, 2016 04:04 PM

 

Published : 27 Oct 2016 04:04 PM
Last Updated : 27 Oct 2016 04:04 PM

ஆவண மோசடி: உலக புகழ்பெற்ற ஆப்கன் பெண் கைது

நேஷனல் ஜியாகிராஃபிக் இதழின் முகப்புப் பக்கத்தில் இடப்பெற்றதன் மூலம் உலக பிரபலம் அடைந்த 'ஆப்கன் பெண்' பாகிஸ்தானில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

போலியான ஆவணங்களின் மூலம் தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் போலியான அடையாள அட்டையை பெற்று பாகிஸ்தானில் தங்கியதாக 'ஆப்கன் பெண்' ஷர்பத் குலா (46) மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக பாகிஸ்தான் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஷர்பத் குலா மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

இந்தக் குற்றத்துக்காக ஷர்பத் குலாமுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

யார் இந்த 'ஆப்கன் பெண்'

1979 ஆம் ஆண்டு ஆப்கனை சோவியத் யூனியன் ஆக்கிரமித்தபோது பெரும்பாலான மக்கள் பாகிஸ்தான் அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தனர்.

அவ்வாறு முகாம்களில் தங்கியிருந்தவர்களில் கவலையும், விரக்தியும் கலந்த முகத்துடன் பச்சைநிறக் கண்களோடு காணப்பட்ட ஷர்பத் குலா(12) என்ற சிறுமியை அமெரிக்காவின் புகழ்பெற்ற புகைப்பட கலைஞர் ஸ்டீவ் மெக்கரி புகைப்படம் எடுத்தார்.

அதன்பின் அந்தப் புகைப்படம் நேஷனல் ஜியாகிராஃபிக் இதழின் அட்டைப் படத்தில் வெளிவந்து 'ஆப்கன் பெண்' என்று உலக புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x