Published : 07 Oct 2016 04:15 PM
Last Updated : 07 Oct 2016 04:15 PM
ஐ.எஸ் அமைப்பில் இருப்பவர்கள் அந்நாட்டின் சராசரி மக்களின் படிப்பறிவை விட அதிகம் படித்தவர்களாக உள்ளனர். என உலக வங்கி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அது மட்டுமில்லாது ஐ.எஸ் அமைப்பில் அதிகம் படித்தவர்களே தற்கொலைப்படை தாக்குதல் போன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவதாகவும் இந்த ஆய்வு கூறியுள்ளது.
வறுமை தீவிரவாதத்தை இயக்கவில்லை
உலக வங்கி தலைமையில் நடந்தப்பட்ட இந்த ஆய்வின் முக்கிய நோக்கம், பொருளாதார சூழல், சமூகப் புறக்கணிப்புகள் போன்றவைதான் ஐ.எஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் சேரக் காரணமாகவுள்ளதா என்ற கோணத்தில் நடத்தப்பட்டது.
ஆனால் இந்த ஆய்வின் முடிவில் வறுமை, சமூகப் புறக்கணிப்புகள் போன்றவை தீவிரவாத இயக்கங்களில் இளைஞர்கள் சேர அடித்தளமிடவில்லை என தெரியவந்துள்ளது.
ஐ.எஸ் அமைப்பில் உள்ளவர்களில் 17% பேர் மட்டுமே உயர்நிலைக் கல்விக்கு கீழ் படித்துள்ளனர். கால் சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள் பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஐ.எஸ் அமைப்பில் சேருவதற்கு முன்னர் இவர்கள் அனைவரும் பணியில் இருந்ததாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT