Published : 05 Aug 2022 10:03 PM
Last Updated : 05 Aug 2022 10:03 PM
விளம்பரங்களில் பெண்கள் நடிக்க தடை விதித்துள்ளது ஈரான் அரசு. ஐஸ்கிரீம் விளம்பர படம் ஒன்றில் பெண் ஒருவர் நடித்திருந்தார். அது சர்ச்சையான நிலையில் இந்த உத்தரவை அந்த நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.
என்ன நடந்தது? - ஐஸ்கிரீம் விளம்பரத்தில் பெண் ஒருவர் ஹிஜாபை தளர்த்திய நிலையில் நடித்திருந்தார். அது மத ரீதியிலான நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருந்ததாக ஈரான் நாட்டின் இஸ்லாமிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஈரானின் கலாசார மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சகம் இந்த தடையை கொண்டு வந்துள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் சார்பில் விளம்பர பட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாம். அதில் இது குறிப்பிடப்பட்டுள்ளதாக ரேடியோ ஃப்ரீ யூரோப் தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குள்ளான விளம்பரம்…
The body responsible for “enjoining right and forbidding evil” in the Islamic Republic of Iran has filed a lawsuit against the Iranian ice-cream manufacturer Domino over two controversial commercials, which it says are “against public decency” and “insult women’s values.” pic.twitter.com/Brho4SGZj3
— Iran International English (@IranIntl_En) July 5, 2022
பெண்களின் மதிப்புகளை அவமதிக்கும் வகையில் இது இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை ஹிஜாப் விவகாரத்தை சார்ந்து இருப்பதாகவும் கருத்துகள் அங்கு நிலவுகிறதாம்.
கடந்த 1979 முதல் ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். இருந்தும் இதற்கு பெண்கள் சிலர் பல்வேறு காலகட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக அவர்கள் கைது நடவடிக்கைக்கும் ஆளாகி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT