Published : 30 Sep 2016 04:48 PM
Last Updated : 30 Sep 2016 04:48 PM
மேற்கு ஜெர்மனியின் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தீ விபத்து குறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, "ஜெர்மனியில் மேற்கு பகுதியிலுள்ள பெர்க்மான்ங்ஷில் மருத்துவமனையின் ஆறாம் தளத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் திடீரென தீ உண்டானது.
இந்தத் தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்த 15 பேரும் மீட்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" எனக் கூறினார்.
தீ விபத்து உண்டான பெர்க்மான்ஷில் மருத்துவமனை 1888 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஜெர்மனியின் பழமையான மருத்துவமனைகளில் ஒன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT