Published : 23 Jul 2022 12:42 PM
Last Updated : 23 Jul 2022 12:42 PM

கருங்கடல் வர்த்தகம்: ரஷ்யா - உக்ரைன் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

இஸ்தான்புல்: உக்ரைன் - ரஷ்யா இடையே கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரு நாடுகளுக்கிடையே நடந்த இந்த ஒப்பந்தத்ததை உலக நாடுகள் வரவேற்றுள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் - ரஷ்யா இடையே நடக்கும் போர்க் காரணமாக கருங்கடல் பகுதியில் வர்த்தகம் தடைபட்டது. இதனால் கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு உலக அளவில் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. ஐரோப்பிய நாடுகளும் இது குறித்து கவலை தெரிவித்திருந்தன.

இந்தச் சூழலில் இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலா் அண்டோனியா குத்தரெஸ், ரஷ்யா, உக்ரைன் இடையே பல வாரங்களாக பேச்சுவாா்த்தை நடத்தி வந்தார். இதற்கான ஏற்பாடுகளை துருக்கி அதிபர் எர்டோகன் முன்னின்று நடத்தினார்.

இந்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கருங்கடல் பகுதியில் வர்த்தகம் தொடர்பாக ரஷ்யா - உக்ரைன் இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த நிகழ்வில் துருக்கி அதிபர் எர்டோகனும் கலந்து கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தை அடுத்து கருங்கடல் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள வா்த்தக வழித்தடங்கள் மீண்டும் திறக்கவும், உணவுப் பொருள் பற்றாக்குறை ஆபத்திலிருந்து உலக நாடுகளைப் பாதுகாக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.

முன்னதாக ஈரானுக்கு பயணம் சென்ற ரஷ்ய அதிபர் புதின், கருக்கடல் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உதவிய துருக்கி அதிபர் எர்டோகனை வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x