Published : 27 Jun 2022 01:28 PM
Last Updated : 27 Jun 2022 01:28 PM
கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் கிளப் ஒன்றில் 21 மாணவர்கள் மர்மமான முறையில் மரணித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உயர்நிலைப் பள்ளித் தேர்வுகள் முடிந்ததைக் கொண்டாட மாணவர்கள் குழு ஒன்று கிழக்கு லண்டனில் உள்ள கிளப் ஒன்றில் கூடி இருந்தனர். இந்த நிலையில் இதில் 21 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கிளப் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
போலீஸார் தரப்பில், “ அவர்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. அவர்களுக்கு விஷம் வைக்கப்பட்டதா என்று குறித்து விசாரணை நடந்து வருகிறது. உடல் கூராய்வுக்காக உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் உயிரிழந்த மாணவர்களின் உடல்களை பெற பெற்றோர்கள் கண்ணீருடன் மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கின்றனர்.
அரசு அதிகாரி கூறும்போது, “அவர்களுக்கு சிறிய வயது. 13, 14 வயதுதான் அவர்களுக்கு இருக்கு..அவர்களது உடல்களை பார்க்கும்போது மனது நிச்சயம் உடையும்” என்றார்.
மாணவர்களின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க பிரதமர் சிரில் ரமபோசா, இளம் வயதினருக்கு மது வழங்கி இருப்பது நிச்சயம் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருத்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT