Published : 19 May 2016 09:39 AM
Last Updated : 19 May 2016 09:39 AM
69 பயணிகளுடன் பாரீஸிலிருந்து கெய்ரோவுக்குப் பயணித்த எகிப்துஏர் விமானம் ராடாரிலிருந்து மறைந்தது.
பாரீசிலிருந்து உள்நாட்டு நேரம் 23:09 மணிக்கு கிளம்பிய விமானம் 69 பயணிகளுடன் மாயமானதாக விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வானில் 11,000 மீட்டர்கள் உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் ராடாலிருந்து மறையும் போது எகிப்திய வான்வெளியில்தான் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாயமானதற்குக் காரணம் என்னவென்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை..
கடந்த மார்ச் மாதத்தில் அலெக்சாண்ட்ரியா-கெய்ரோ எகிப்துஏர் விமானம் மனநிலை சரியில்லாத நபர் ஒருவரால் கடத்தப்பட்டது. தனது மாஜி மனைவியைக் காண விமானத்தை சைப்ரஸுக்கு மிரட்டிக் கடத்திச் சென்றதாக பின்னர் தகவல் வெளியானது.
இவர் 6 மணி நேரங்கள் கழித்து சரணடைந்துள்ளார். இந்நிலையில் தற்போது பாரிஸ்-கெய்ரோ விமானம் ராடாரிலிருந்து மாயமாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT