Published : 14 Jun 2022 05:19 PM
Last Updated : 14 Jun 2022 05:19 PM

‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ கட்டுரையை எழுதிய எழுத்தாளருக்கு கணவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை

கணவருடன் நான்சி

ஒரேகான்: ‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ (how to murder your husband) என்ற கட்டுரையை எழுதிய நாவலாசிரியான நான்சி என்பவருக்கு, கணவரை கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நாவலாசிரியர் நான்சி கிராம்ப்டனின் கணவர் டேனியல் புரோபி சமையல் கலை நிபுணராகவும், ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நான்சியும், டேனியல் புரோபியும் நிதி நெருக்கடியில் தவித்து வந்துள்ளனர். கடன் பிரச்சினையிலும் சிக்கினர். இந்த நிலையில் கணவர் டேனியல் புரோபி பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணத்திற்காக, அவரை நான்சி 2018-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றார்.

இது தொடர்பாக நடந்த விசாரணையிதான் ஒரேகான் மாகாண நீதிமன்றம், நான்சிக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. விசாரணையில் ”என் நாவல் ஆராய்ச்சிக்காகவே துப்பாக்கியை வாங்கினேன்” என நான்சி தெரிவித்தார். மேலும் “நான் எந்தத் திட்டமும் இல்லாமல்தான் ‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ என்ற கட்டுரையை எழுதினேன். அதில் எந்த நோக்கமும் இல்லை. நீங்கள் நினைப்பதுபோல் எனது கணவரை கொல்வதற்காக அந்தக் கட்டுரையை நான் எழுதவில்லை” என்று கூறினார்.

தனது கணவரை கொல்வதற்கு 7 வருடங்களுக்கு முன்னர்தான் ‘உங்கள் கணவரை கொலை செய்வது எப்படி?’ என்ற கட்டுரை நான்சி எழுந்தி இருந்தார். இதன் காரணமாக இவரது வழக்கு அமெரிக்காவில் பரவலாக பேசப்பட்டது.

நான்சி "தி ராங் ஹஸ்பண்ட்" , "தி ராங் லவ்வர்" போன்ற குறு நாவல்களையும் எழுதியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x