Published : 08 Jun 2022 12:44 PM
Last Updated : 08 Jun 2022 12:44 PM

உலகில் வாழ்வதற்கு காஸ்ட்லியான நகரம்; சிக்கனமான நகரம்: பட்டியல் வெளியீடு

உலகில் வாழ்வதற்கு காஸ்ட்லியான நகரம், சிக்கனமான நகரம் பட்டியல் வெளியாகியுள்ளது. மார்ச் 2021ன் ஆய்வின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இசிஏ இன்டர்நேஷனல் (ECA International) என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி உலகிலேயே வாழ்வதற்கு காஸ்ட்லியான நகரமாக ஆசியாவின் ஹாங்காங் நகரம் தேர்வாகியுள்ளது. நியூயார்க் இரண்டாம் இடத்திலும் ஜெனீவா மூன்றாம் இடத்திலும் உள்ளன. லண்டன் மற்றும் டோக்கியோ முறையே 4 மற்றும் 5ஆம் இடத்தில் உள்ளன.

டாப் 5 காஸ்ட்லி நகரங்களில் லண்டனும், டோக்கியோவும் இடம்பெற அதிகரித்துவரும் வாடகையே பிரதானக் காரணமாகக் கூறப்படுகிறது. நியூயார்க், லண்டன் நகரங்களில் வாடகைக் கட்டணங்கள் முறையே 20% மற்றும் 12% அதிகரித்துள்ளன.
இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் 13வது இடத்தில் உள்ளது. வாடகை, பெட்ரோல் விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களில் விலைகள் அடிப்படையில் சிங்கப்பூர் 13வது இடத்தில் உள்ளது. சீன நகரங்களான ஷாங்காய் மற்றும் குவாங்சோ இந்தப் பட்டியலில் 8 மற்றும் 9வது இடங்களில் உள்ளன.

உலகிலேயே வாழ மிகவும் சிக்கனமான நகரமாக துருக்கி நாட்டின் தலைநகரான அங்காரா உள்ளது.

சில சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள்: > உலகிலேயே காஸ்ட்லியான நகரான ஹாங்காங்கில் ஒரு கோப்பை தேநீர் விலை 5.21 டாலர். ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை $3.04. ஒரு கிலோ தக்காளியின் விலை $11.51 டாலர்.
> ஈரான் தலைநகரான டெஹ்ரானில் உலகிலே பெட்ரோல் விலை மிகவும் குறைவாக உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோலை $0.09க்குப் பெறலாம்.
> உக்ரைன் போரால் உலகம் முழுவதும் சமையல் எண்ணெய் விலை 25% வரை அதிகரித்துள்ளது.
> பல்வேறு நகரங்களிலும் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. சராசரியாக 37% வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அதில் அதிகபட்சமாக லெபனானின் பெய்ரூட் நகரில் 1,128% அதிகரித்துள்ளது.

டாப் 20 காஸ்ட்லியான நகரங்கள்:

ஹாங்காங் (1)
நியூயார்க் (4)
ஜெனீவா (3)
லண்டன் (5)
டோக்கியோ (2)
டெல் அவிவ் (7)
ஜூரிச் (6)
ஷாங்காய் (9)
குவாங்சோ (10)
சீயோல் (8)
சான் ஃபிரான்சிஸ்கோ (15)
சென்சென் (12)
சிங்கப்பூர் (13)
பீஜிங் (16)
ஜெருசலே (18)
பெர்ன் (17)
யோஹோஹோமா (11)
கோபன்ஹேகன் (14)
அஸ்லோ (19)
தைபே (20)

அடைப்புக்குறிக்குள் இருக்கும் எண் தரவரிசை எண்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x