Published : 16 May 2016 09:50 AM
Last Updated : 16 May 2016 09:50 AM
ஏமனில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்கு தலில் போலீஸ் தேர்வு முகாமுக்கு வந்த 37 பேர் கொல்லப்பட்டனர்.
ஏமனின் தென்மேற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான முகால்லாவில் போலீஸ் பணிக் கான ஆட்சேர்ப்பு மையம் அமைந் துள்ளது.
இங்கு போலீஸ் பணிக் கான தேர்வு நடந்து கொண் டிருந்தது. அப்போது மையத்துக் குள் புகுந்து ஆட்சேர்ப்பு வரிசையில் இணைந்த ஐஎஸ் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டி யிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், 37 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து ஐஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எங்கள் சகோதரர் அபு அல் பரா அல் அன்சாரி இந்த தாக்கு தலை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்’’ என குறிப்பிடப் பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை முகால்லாவின் புறநகர் பகுதியில் ராணுவ நிலைகளை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 வீரர்கள் உயிரிழந் தனர். இதனால் ஏற்பட்ட பதற்றம் அடங்குவதற்குள் இரண்டாவது முறையாக முகால்லா நகர் மீது ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT