Published : 11 May 2022 06:25 PM
Last Updated : 11 May 2022 06:25 PM
இஸ்ரேல் படைகள் தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷிரின் அபு அக்லா பாலஸ்தீன பத்திரிகையாளர். இவர் பல ஆண்டுகளாக அல் ஜசீரா பத்திரிகையில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்தால் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்லப்பட்டபோது ஷிரின் பத்திரிக்கையாளர்களுக்கான தற்காப்பு ஆடையையே அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. ஷிரின் அபு அக்லாவின் மரணம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவுச் செய்துள்ளனர். ஆனால் இஸ்ரேல் ராணுவம் இதனை மறுத்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனர்களுக்கு இடையேயான மோதலில் பாலஸ்தீனர்களால் அவர் சுடப்பட்டிருக்கலாம் என்று என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
வீடியோ
Al Jazeera journalist Shireen Abu Akleh shot dead by Israeli snipers in the West Bank while wearing a clearly market 'PRESS' jacket and helmet. When will the world wake up and condemn Israel's war crimes? pic.twitter.com/r9ffFgiRrv
— muslim daily (@muslimdaily_) May 11, 2022
கடந்த மாதம் இறுதியில் ஜெருசலேமில் அல் அக்ஸா மசூதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் உருவாக்கியது.
இருதரப்பிலும் மோதல்கள் நடந்தன. இந்த நிலையில் மேற்கு கரையில் செய்தி சேகரிக்க சென்ற அல் ஜசீரா பத்திரிகையாளர் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT