Published : 20 Apr 2022 07:14 AM
Last Updated : 20 Apr 2022 07:14 AM
லாகூர்: பாகிஸ்தானில் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது. 34 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிகழ்ச்சியில் அதிபர் கலந்து கொள்ளவில்லை. பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில், அவரது அரசு கவிழ்ந்தது. புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பதவியேற்றார்.
நேற்று முன்தினம்புதிய அமைச்சரவை பதவியேற்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று அதிபர் ஆரிப் ஆல்வி கூறியதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். உடல் நலக்குறைவு என்று ஏற்கெனவே அறிவித்த அதிபர் ஆரிப் ஆல்வி நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக பாகிஸ்தான் நாடாளுமன்ற அவைத் தலைவர் சாதிக்சஞ்ரணி அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
31 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 3 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அமைச்சரவையில் எதிர்க்கட்சிகளுக்கு இடம் அளிக்கப்பட்டுள் ளது. பிரதமர் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி சார்பில் 13 அமைச்சர்களும் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் 9 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். புதிய அமைச்சர்களின் இலாகா விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT