Published : 13 Apr 2022 12:00 AM
Last Updated : 13 Apr 2022 12:00 AM

நியூயார்க் நகர சுரங்கப்பாதையில் துப்பாக்கிச்சூடு - 16 பேர் காயம்

நியூயார்க்: புரூக்ளின் நகரத்தில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் காயமடைந்திருப்பதாக நியூயார்க் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

புரூக்ளின் நகரத்தில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பலருக்கு மற்றவர்கள் உதவி செய்யும் படியான புகைப்படங்களை மக்கள் ட்விட்டரில் பகிர்ந்திருந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்த நியூயார்க் நகர காவல்துறை தெரிவிக்கும் போது, "புரூக்ளின் துப்பாக்கிச் சூடு ஒரு பயங்கராத செயலாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. 5 அடி 5 அங்குல உயரமுள்ள ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். சந்தேப்படும் நபர் ஆரஞ்சு நிற அங்கி மற்றும் வாயு முகமூடி (gas mask) அணிந்து தப்பிச் சென்றுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தனியாக செயல்பட்டுள்ளார். அவரின் நோக்கம் என்ன என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தனர்.

25- வது செயின்ட் ஸ்டேஷனிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் ஆர் ரயிலில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கதவுகள் மூடப்பட்டதும் சந்தேக நபர் புகைகுண்டுகை வீசி துப்பாக்கியால் சூட்டார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனுக்கு இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x