Published : 09 Apr 2022 06:46 AM
Last Updated : 09 Apr 2022 06:46 AM

உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்: 35 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் கிராமடோர்ஸ் ரயில் நிலையத்தின் மீது நேற்று ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தியதில் எழும்பிய புகைமூட்டம். உக்ரைன் அதிபர் வாலோடிமிர் ஜெலன்ஸ்கி இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். படம்: பிடிஐ

கீவ்: உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சிறப்பு ராணுவ செயல்பாடு என்ற பெயரில் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. 44 நாட்கள் கடந்த பின்னரும் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று உக்ரைனில் உள்ள ரயில் நிலையம்ஒன்றைக் குறி வைத்து ரஷ்யராணுவம் தாக்குதல் நடத்தியது. கிழக்கு உக்ரைனின் கிராமடோர்ஸ் நகரில் உள்ள ரயில் நிலையத்தைக் குறி வைத்து ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர்.

100க்கும் மேற்பட்டோர்..

மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் மக்களைப் பாதுகாத்து, பத்திரமாக வெளியேற்ற உக்ரைன் அரசு இந்த ரயில் நிலையத்தைத்தான் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யத் தாக்குதலில் இருந்து தப்பி பாதுகாப்பான இடங் களுக்குப் பொதுமக்கள் செல்ல முயன்ற போது இந்தத் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.

இதனிடையே உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் இது வரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ள தாகத் தெரியவந்துள்ளது. இதை மரியுபோல் நகர மேயர்வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேயர் வாடிம் பாய்சென்கோ கூறும்போது, "கடந்த இந்த ஒரு மாதத்தில் ரஷ்ய ராணுவத்தினரால் சுமார் 5,000 உக்ரைன் நாட்டவர் கொல்லப்பட்டுள்ளனர். இவர் களில் 210 பேர் குழந்தைகள் ஆவர். உக்ரைனின் சாலையில் ஆங்காங்கே பிணங்கள் குவி யல் குவியலாய் கிடக்கின்றன. ரஷ்யா உக்ரைனின் பல நகரங் களை அழித்துள்ளது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

இந்நிலையில் ரஷ்ய அதிபர்புதினை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x