Published : 30 Mar 2022 11:01 AM
Last Updated : 30 Mar 2022 11:01 AM
மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ளது அமெரிக்கா.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கி ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இந்தச் சூழலில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா, நேட்டோ நாடுகள் மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியது. இதில் ஓரளவு பலனும் கண்டுள்ளது. அமெரிக்காவின் நட்பு நாடுகள் பலவும் ரஷ்யாவுடனான தங்களின் நட்பை முறித்துக் கொண்டுள்ளன.
ரஷ்யா சென்ற அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி க்ரினர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அவரது உடைமைகளில் தடை செய்யப்பட்ட கேனபிஸ் எண்ணெய் இருந்தது என்பது ரஷ்யாவின் குற்றச்சாட்டு. ஆனால் இது சதி என அமெரிக்கா கூறுகிறது. ஒரு மாதமாக சிறையில் உள்ள பிரிட்னியை நேற்றுதான் அமெரிக்க தூதரக அதிகாரியால் சந்திக்க முடிந்தது.
இந்நிலையில், ரஷ்யர்கள் அமெரிக்காவில் இருந்தால் அவர்கள் தேவையற்ற சிக்கல்களில் சிக்கவைக்கப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம் என்பதால் ரஷ்யாவில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேறுமாறு வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கர்களை ரஷ்யா குறிவைத்து வம்பு, வழக்குகளில் சிக்கவைக்கலாம் என்பதால் உடனடியாக அமெரிக்கர்கள் அனைவரும் ரஷ்யாவில் இருந்து வெளியேறுமாறு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT