Published : 06 Apr 2016 10:40 AM
Last Updated : 06 Apr 2016 10:40 AM
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு வடமேற்கில் உள்ள பர்வான் மாகாணத்தில் நேற்று காலை போலீஸ் முகாம் ஒன்றை தாக்கும் நோக்கத்துடன் தற் கொலை படை தீவிரவாதி ஒருவர் மோட்டார் பைக்கில் வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத் தது. அந்த நபரைஅடையாளம் கண்ட போலீஸார் அவரை காரில் விரட்டினர்.
போலீஸார் விரட்டி வருவதை கண்ட அந்த நபர், ஒரு பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு அருகில் தனது உடலில் பொருத்தியிருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்தார். இதில் பொதுமக்கள் 6 பேர் இறந்தனர். ஒரு போலீஸ்காரர் உட்பட 22 பேர் காயம் அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT