Published : 25 Mar 2022 07:00 AM
Last Updated : 25 Mar 2022 07:00 AM

படுக்கையறை, சமையலறை, கழிவறை வசதிகளுடன் உலகின் மிகப் பெரிய 22 அடி உயர ஹம்மர் கார்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யான் வைத்திருக்கும் ஹம்மர் கார் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராட்சத கார் போல் தோற்றமளிக்கும் இந்த ஹம்மர் காரின் உயரம் 22 அடி, நீளம் 46 அடி, அகலம் 20 அடி ஆகும். இந்தக் கார் ஹம்மர் ஹெச் 1 எக்ஸ் 3 என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான ஹெச் 1 மாடல் ஹம்மர் காரின் அளவைவிட மூன்று மடங்கு அதிகம் என்பதால் ‘எக்ஸ் 3’ என்று சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தக் காரின் உள்ளே படுக்கையறை, கழிப்பறை, சமையலறை உள்ளன. ஒவ்வொரு சக்கரத்துக்கும் தனித்தனி இன்ஜின் என இந்தக் காரில் நான்கு டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஷேக் ஹமத் தீவிர கார் பிரியர். கோடிக் கணக்கில் பணம் செலவழித்து விதவிதமான கார்களை வாங்கி சேகரித்து வருகிறார். அபுதாபில், கார்களுக்கென்று தனியே அருங்காட்சியகம் வைத்துள்ளார். கார் சேகரிப்புகளுக்காக கின்னஸ் பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார். தற்போது அவரது அருங்காட்சியகத்தில்தான் இந்த ஹம்மர் கார் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கார் காட்சிப்படுத்த மட்டுமல்ல, ஓட்டவும்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x