Published : 19 Apr 2016 09:53 AM
Last Updated : 19 Apr 2016 09:53 AM
சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் செயற்கையாக உரு வாக்கப்பட்டுள்ள ஒரு தீவில், சீன ராணுவத்துக்கு சொந்தமான ஒரு விமானம் முதன்முறையாக வெளிப்படையாக தரையிறங்கி உள்ளது.
ஆனால் காயமடைந்த 3 பேரை மீட்பதற்காகவே ராணுவ விமானம் அங்கு தரையிறங்கியதாக சீனா விளக்கம் அளித்துள்ளது.
அப்பகுதியில் போர் விமானங் களை நிறுத்த சீனா திட்டமிட்டுள் ளதாக பிற நாடுகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், அதை உறுதிப் படுத்தும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது.
தென் சீன கடல் பகுதியில் செயற்கையாக பல தீவுகளை சீனா உருவாக்கி வருகிறது. சீனாவின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்தத் தீவுகளை ராணுவ நோக் கங்களுக்காக பயன்படுத்த திட்ட மிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி உள்ளது. ஆனால், இந்த விஷயத் தில் பகைமை நோக்கம் இல்லை என சீனா கூறி வருகிறது.
இந்நிலையில், சீன அரசு சார்பில் செயற்கையாக உருவாக்கப்பட் டுள்ள ‘பீரி கிராஸ் ரீப்’ என்ற தீவில் புதிதாக ஒரு விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதில் 3 கி.மீ. நீளத்துக்கு விமான ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுபாதையில் கடந்த மாதம் பயணிகள் விமானம் சோதனை ஓட்டத்தை நடத்தியது. இப்போது இந்தத் தீவில் ராணுவ விமானம் முதன்முறையாக வெளிப்படை யாக தரை இறங்கி உள்ளது.
இதுகுறித்து சீன ராணுவம் சார்பில் வெளியாகும் நாளிதழின் முதல் பக்கத்தில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதில், “தென் சீன கடல் பகுதியில் ராணுவ விமானம் ரோந்து பணியில் ஈடுபட் டிருந்தது. அப்போது, பீரி கிராஸ் ரீப் தீவில் 3 தொழிலாளர்கள் படு காயமடைந்ததாக ஞாயிற்றுக் கிழமை தகவல் கிடைத்தது. அவர் களை மீட்பதற்காக ராணுவ விமானம் அங்கு தரையிறங்கியது.
பின்னர் காயமடைந்தவர் களை அங்கிருந்து அழைத்து சென்ற வீரர்கள், ஹைனன் தீவில் உள்ள மருத்துவமனை யில் அனுமதித்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT