Published : 06 Mar 2022 12:43 PM
Last Updated : 06 Mar 2022 12:43 PM

'கேள்விக்குறியாகிறது உக்ரைன் எதிர்காலம்': ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 11வது நாளாக நீடித்துவரும் நிலையில், உக்ரைன் இன்னும் சண்டையைத் தொடர்ந்தால் அந்நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.

இது குறித்து ரஷ்ய அதிபர் நேற்று பேசியதாவது: உக்ரைனில் உள்ள அதிகாரிகள் தாங்கள் இப்போது செய்வதையே தொடர்ந்தால் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகும். உக்ரைன் ஒரு நாடாக தொடர்வதே கூட சிக்கலாகிவிடும். இது நடந்தால், உக்ரைன் அதிகாரிகளே அதற்கு முழுப் பொறுப்பாவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்யா 11வது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில் அங்கு பொருளாதாரம் முடங்கி, மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி மேற்கத்திய நாடுகளிடம் போர் விமானங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நேட்டோவுக்கு எச்சரிக்கை: ஆனால் உக்ரைனை 'நோ ஃப்ளை' ஜோனாக அறிவித்தால் மோசமான விளைவுகளை மேற்கத்திய நாடுகள் சந்திக்க நேரிடும் என்று புதின் எச்சரித்துள்ளார். அப்படி ஒரு நடவடிக்கையை நேட்டோ எடுத்தால், அதை தங்களுக்கு எதிரான போராகவே கருதி நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நிதி உதவி கோரியதோடு ரஷ்யா மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு கோரினார். உக்ரைனுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்கப்படும் என அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

அஸோஸ் கடற்கரையின் துறைமுக நகரான மரியுபோலில் உள்ள 4.5 லட்சம் மக்களுக்கு பேருந்துகள், கார்கள் மூலம் வெளியேறி வருகின்றனர். மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் 2 நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையின்படி இந்த போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x