Published : 01 Apr 2016 10:08 AM
Last Updated : 01 Apr 2016 10:08 AM
ஹவாய் தீவுகளிலிருந்து ஜப்பானை நோக்கிச் சென்ற விமானம், யோகா செய்ய வேண்டும் என அடம்பிடித்த பயணியால் அவசரமாக தரை யிறக்கப்பட்டது. அந்தப் பயணி கைது செய்யப்பட்டார்.
யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் ஹோனாலுலு சர்வதேச விமான நிலையத்திலிருந்து, நரிடா (புதிய டோக்கியோ) விமான நிலையத்துக்கு புறப்பட்டது. அப்போது, யோங்டோ பே என்ற பயணி, விமான பணியாளர்களுடன் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். மேலும், தனது மனைவியையும் பிடித்து தள்ளி விட்டார்.
உணவு வழங்கப்படும்போது தான் இருக்கையில் அமர மாட்டேன் என்று கூறிய அவர், விமானத்தின் பின்பகுதிக்குச் சென்று, யோகா மற்றும் தியானத் தில் ஈடுபட முயன்றார். இருக்கைக் குத் திரும்புப்படி அவரது மனைவி யும், விமான ஊழியர்களும் தெரி வித்தபோது அவர் கடும் கோப மடைந்தார்.
இதைத்தொடர்ந்து யோங்டோ பே தனது மனைவியைப் பிடித்து ைதள்ளிவிட்டார். அந்த விமானத்தில் பயணித்த ராணுவ வீரர்கள் அவரை இருக்கையில் வலுக் கட்டாயமாக அமர வைக்க முயன்றபோது, தலையால் இடித்தும், கடித்தும் ரகளை செய் துள்ளார். பயணிகளைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டிய அவர், கடவுள் இல்லை எனக் கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து, விமானம் பாதியில் திருப்பப்பட்டு, தரை யிறக்கப்பட்டது. யோங்டோ பே, எஃப்பிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
25 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.16 லட்சம்) ரொக்க ஜாமீனில் அவரை விடுவித்த அமெரிக்க நீதிமன்றம், ஓஹாவு தீவை விட்டு வெளியேறக் கூடாது என நிபந்தனை விதித்துள்ளது. அவருக்கு மனநல பரிசோதனை செய்யப்பட உள்ளது.
தான் கடந்த 11 நாட்களாக உறங்கவில்லை என எஃப்பிஐ அதிகாரிகளிடம் யோங்டோ பே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT