Published : 24 Feb 2022 05:11 AM
Last Updated : 24 Feb 2022 05:11 AM
மாஸ்கோ: உக்ரைனில் இருந்து வெறும் 20 கி.மீ. தொலைவில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது செயற்கைக்கோள் படம் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் உக்ரைனை போர்மேகங்கள் சூழ்ந் துள்ளது உறுதியாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே சமீபகாலமாக போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால் உக் ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக் கலாம் என உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.
இதனிடையே, உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த அதிபர் விளாடிமின் புதினுக்கு ரஷ்ய நாடாளுமன்றம் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. அதேநேரத்தில், உக்ரைன் கிழக்கு பகுதியில் உள்ள 2 நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷ்யா.
தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்யாவின் போர்ப் படைகள் நகர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீ. தொலைவில்தான் ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளன. தெற்கு பெலாரஸ் மோஜர் அருகே சிறிய விமான தளத்தில் 100-க்கும் மேற்பட்ட ராணுவ வாகனங்கள், ஏராளமான ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இந்த விமானத்தளம் உக்ரைன் எல்லையில் இருந்து 40 கி.மீட்டருக்கும் குறைவான தொலைவில்தான் உள்ளது. மேற்கு ரஷ்யாவின் பொச்சேப் பகுதி அருகே கூடுதல் ராணுவம் நிறுத்தப் பட்டுள்ளதும் தெளிவாக தெரிய வந்துள்ளது.
மேலும், பெல்கோரோட்டின் மேற்கு புறநகரில் உள்ள ராணுவ தளத்தில் ஒரு புதிய மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்து செயற்கைகோள் புகைப் படங்கள் மூலம் தெரியவந்துள்ளன.
அவசர நிலை பிரகடனம்
இதனிடையே, நாடு தழுவிய அவசர நிலை பிரகடனத்தை உக்ரைன் அறிவித்துள்ளது. டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இந்த உத்தரவு நாடு முழுவதற்கு பொருந்தும் என்றும் இந்த உத்தரவு 30 நாட்கள் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விதித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை அதிபர் ஜோ பைடன் நேற்று சந்தித்தார். அவர் கூறும்போது, ‘‘சர்வதேச சட்டத்தை ரஷ்யா அப்பட்டமாக மீறியுள்ளது. ரஷ்யாவின் 2 நிதி நிறுவனங்களான விஇபி, ரஷ்யாவின் ராணுவ வங்கி ஆகியவை இப்போது பொருளாதாரத் தடைகளை எதிர்கொள் கின்றன. உக்ரைன் பற்றிய ரஷ்ய அதிபர் புதினின் பேச்சுகளால் நாங்கள் யாரும் ஏமாற மாட்டோம். இந்த நடவடிக்கைகளை புதின் தொடர்ந்தால் மேலும் பொருளா தாரத் தடைகள் விதிக்கக் கூடும்’’ என்றார்
பேச்சுவார்த்தைக்கு தயார்
உக்ரைன் விவகாரத்தில் பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா எப்போதும் தயாராகவே உள்ளது என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
உக்ரைன் விவகாரத்தில் திறந்த மனத்துடன் நேரடியான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால், ரஷ்யாவின் பாதுகாப்பு, ரஷ்ய குடிமக்கள் பாதுகாப்பு என்று வரும்போது பேச்சுவார்த்தைக்கு இடமில்லை.
நீண்டகாலமாக நிலவி வரும் இந்தப் பிரச்சினையில் தாமதப்படுத்தாமல் முடிவை எடுப்பது அவசியம் என்று நான் கருதுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT