Published : 11 Feb 2022 07:37 PM
Last Updated : 11 Feb 2022 07:37 PM

'அனைவரும் சமம்' - டவுண்ட் சிண்ட்ரோம் பாதிப்பால் ஒதுக்கப்பட்ட சிறுமியுடன் பள்ளிக்குச் சென்ற அதிபர்!

ஸ்கோப்ஜே: தென்கிழக்குஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியா நாட்டில், டவுண் சிண்ட்ரோம் மரப்பணு குறைபாடால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் அவரது வகுப்புத் தோழர்களால் கிண்டல் செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டிருக்கிறார். இதனை அறிந்த அந்நாட்டு அதிபர் ஸ்டீவோ பென்டரோவ்ஸ்கி, அம்மாணவிக்கு ஆதரவாக அம்மாணவியுடன் சேர்ந்து பள்ளிக்குச் சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 வயதான எம்ப்லா அடெமி என்ற சிறுமிதான் டவுண் சிண்ட்ரோம் என்ற மரபணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார் . எம்ப்லா அடெமி தான் பயிலும் பள்ளியில் உள்ள பிற மாணவர்களால் தொடர்ந்து கிண்டலுக்கு உள்ளாகினார். மேலும், பள்ளியில் படிக்கும் பிற மாணவர்களின் பெற்றோர்களும் எம்ப்லா அடெமியின் தோற்றம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் மாணவி மன அழுத்தத்துக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் வடக்கு மாசிடோனியா நாட்டின் அதிபரான ஸ்டீவோ பென்டரோவ்ஸ்கியிடம் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து எம்ப்லா அடெமியுடன் இணைந்து பள்ளிக்குச் சென்றிருக்கிறார் அதிபர் ஸ்டீவோ பென்டரோவ்ஸ்கி. ’அனைவரும் சமம்’ என்பதை மாணவர்களிடம் உணர்த்தவே எம்ப்லாவுடன் பள்ளிக்குச் சென்றதாக ஸ்டீவோ பென்டரோவ்ஸ்கி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், மாணவி ஸ்டீவோ பென்டரோவ்ஸ்கி இணைந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், அதிபர் ஸ்டீவோ பென்டரோவ்ஸ்கிக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

வாசிக்க > இவர்களுக்கும் இயல்பு வாழ்க்கை சாத்தியமே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x