Published : 20 Jan 2022 06:37 AM
Last Updated : 20 Jan 2022 06:37 AM

கின்னஸ் உலக சாதனை படைத்த உலகின் வயதான மனிதர் 112 வயதில் காலமானார்

ப்யூன்டே

மாட்ரிட்: உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாடர்னினோ டிலா ப்யூன்டே நேற்று முன்தினம் தனது 112 -வது வயதில் காலமானார்.

ஸ்பெயின் நாட்டின் வடமேற்கில் உள்ள லியோன் நகரைச் சேர்ந்தவர் சாடர்னினோ டிலா ப்யூன்டே. இவரை உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் சாதனைப் புத்தகம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தது.

இவர் லியோன் நகருக்கு அருகில் உள்ள பியூன்டே காஸ்ட்ரோ என்ற இடத்தில் கடந்த 1909-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி பிறந்தார். ஸ்பெயினில் கடந்த 1918-ல் ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற பெருந்தொற்று பரவியபோது அதிலிருந்து உயிர் தப்பினார்.

தனது 13-வது வயதில் காலணிதொழிற்சாலை ஒன்றில் பணியாற்றத் தொடங்கிய ப்யூன்டே பிறகு சொந்தமாக காலணி வியாபாரத்தில் ஈடுபட்டார்.

ப்யூன்டே மற்றும் இவரது மனைவி அன்டோனியாவுக்கு 8 குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் மூலம் 14 பேரக்குழந்தைகள் மற்றும் 22 கொள்ளு பேரக் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ப்யூன்டே நேற்று முன்தினம் லியோன் நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரதுஉடல் உள்ளூர் கல்லறையில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இத்தகவலை ஸ்பெயின் அரசின் இஎப்இ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x