Published : 12 Jan 2022 12:42 PM
Last Updated : 12 Jan 2022 12:42 PM

இராக்கில் மிக விரைவான மணமுறிவு: பாடலுக்கு நடனம் ஆடியதால் மணமகளை விவாகரத்து செய்த மணமகன்

பாக்தாத்: இராக்கில் பாடல் ஒன்றுக்கு மணமகள் நடனம் ஆடியதற்காக திருமணமான சில நாட்களிலேயே மணமகன் அவரை விவாகரத்து செய்தார்.

மத்தியக் கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரை அங்கு பெண்களுக்கு எதிராக நிலவும் கட்டுப்பாடுகள் எப்போதும் விமர்சனத்துக்கு உள்ளாகும். தங்களுக்குப் பிடித்த துணையைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து, பிடித்த உடையை அணிவது, பாடல்கள் பாடுவது, நடனம் ஆடுவது என அனைத்தும் விமர்சனத்துக்கு உள்ளாகும். தண்டனைகளும் உண்டு.

இவ்வாறான சூழலில்தான் ஆதிக்கம் நிறைந்த வரிகள் உடைய பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியதற்காக மணமகளை, மணமகன் விவாகரத்து செய்திருக்கிறார். இராக் தலைநகர் பாக்தாத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

விவாகரத்து செய்யும் அளவுக்கு அந்தப் பாடலில் என்ன உள்ளது என்று பார்த்தால், மிசீதரா என்ற சிரியா நாட்டின் பாடல்தான். இப்பாடலை லமிஸ் கான் பாடியுள்ளார். அப்பாடலில் நான் ஆதிக்கம் நிறைந்தவள். உன்னைக் கட்டுக்குள் வைப்பேன் என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இப்பாடலுக்கு திருமணம் முடிந்த கையோடு நடனம் ஆடியதற்காகத்தான் மணமகள் மீது மணமகனும் அவரது குடும்பத்தினரும் கோபம் அடைந்துள்ளனர். மணமகளின் செயலின் மூலம் தங்கள் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கம் வந்துவிட்டதாக மணமகள் வீட்டாரோடு வாக்குவாதம் செய்துள்ளனர்.

இறுதியில் மணப்பெண்ணை மணமகன் விவகரத்து செய்திருக்கிறார். இராக்கில் மிக விரைவாக வழங்கப்பட்ட விவாகரத்து வழக்காக இது பார்க்கப்படுகிறது.

மிசீதரா பாடல் காரணமாக, நடக்கும் முதல் விவாகரத்து சம்பவம் இதுவல்ல. இதற்கு முன்னரும் இப்பாடல் காரணமாக விவாகரத்து சம்பவங்கள் நடந்துள்ளதாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x