Published : 27 Apr 2016 02:37 PM
Last Updated : 27 Apr 2016 02:37 PM
தெற்கு வங்கதேசத்தில் இஸ்லாம் பற்றியும் முகமது நபிகள் பற்றியும் தரக்குறைவாக பேசியதாக இந்து மதத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு சிறைத் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
அறிவியல் ஆசிரியர் தனது வகுப்பறையில் குரான் அல்லாவின் வார்த்தைகள் அல்ல என்றும் சொர்க்கம் நரகமெல்லாம் ஒன்றும் இல்லை என்றும் கூறியதையடுத்து கடும் சர்ச்சைகள் கிளம்பியது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, பகேர்ஹத் மாவட்டத்தில் உள்ள ஹிஜ்லா உயர் நிலைப்பள்ளி மாணவர்கள், அறிவியல் பாட உதவி ஆசிரியர் கடந்த ஞாயிறன்று வகுப்பில் குரான் அல்லாவின் வார்த்தைகள் அல்ல என்றும் சொர்க்கம் நரகமெல்லாம் இல்லை என்றும் கூறியதாக புகார் எழுப்பியதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள், கிராமத்தினர் அடங்கிய கும்பல் ஒன்று இந்து மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினரை அடித்துத் தாக்கியுள்ளனர். இதனால் பீதியடைந்த இந்து குடும்பத்தினர் கதவைப் பூட்டிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிறகு போலீஸ் தலையீட்டுக்குப் பிறகுதான் புகார் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது பொது இடத்தில் மத நிந்தனை செய்ததாக உதவி ஆசிரியர் ஒப்புக் கொண்டார். இவருக்கு துணை போனதாக குற்றம்சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் மீதும் விசாரணை நடைபெற இருவருக்கும் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்ததாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT