Published : 06 Dec 2021 08:44 AM
Last Updated : 06 Dec 2021 08:44 AM
அமெரி்க்காவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவினாலும், டெல்டா வைரஸைவிட தீவிரம் குறைந்ததாகவே ஒமைக்ரான் இருக்கிறது என்று முதல் கட்ட தகவல்கள் கிடைத்துள்ளது என அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், கனடா போன்ற நாடுகள்ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்கும் அச்ச நிலைக்கு சென்றுவிட்டனர்.
அமெரி்க்காவிலும் ஒமைக்ரான் மெல்லப் பரவி தற்போது 3 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துவிட்டது.ஆனால், ஆபத்தான டெஸ்டா வைரஸைவிட, ஒமைக்ரான் வைரஸால் ஏற்படும் பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருக்கிறது என்று அமெரிக்க மருத்துவஅதிகாரிகள் தெரிவி்க்கிறார்கள்.
அமெரி்க்க அதிபர் ஜோ பிடனின் தலைமை மருத்துவ ஆலோசகர் மருத்துவர் அந்தோனி ஃபாஸி சிஎன்என் சேனலுக்கு அளித்த பேட்டியி்ல் கூறியதாவது:
ஒமைக்ரான் வைரஸ் குறித்தும், அதன் தீவிரத்தன்மை குறித்தும் முடிவுக்கு வருவதற்கு அதிகமான தகவல்கள் தேவைப்படுகின்றன. ஆனால், முதல்கட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் டெல்டா வைரஸின் தீவிரத்தைவிட, ஒமைக்ரான் வைரஸ் தீவிரம் குறைவாகத்தான் இருக்கிறது.
ஆனால், தீவிரம் குறைந்ததா அல்லது உண்மையிலேயே ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்துமா, டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஆபத்து குறைவானதா அல்லது ஆபத்து மிகுந்ததா என்பதை மிகுந்த கவனத்துடன் ஆய்வு செய்தே முடிவு செய்ய வேண்டும்.
ஆப்பிரிக்க மக்கள் அமெரி்க்காவுக்குள் நுழைய தடை இருப்பது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் வருத்தமடைந்ததை அறிந்தோம். விரைவில் இந்த தடைகள் நீக்கப்படும் என நம்புகிறேன். தென் ஆப்பிரிக்கா மற்றும் பிற ஆப்பிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடை உண்மையில் கடினமான சூழலைத்தான் ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தார்
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் 3 மாகாணங்களில் பரவிவிட்டது. வடகிழக்கு, தெற்கு, கிரேட் ப்ளைன்ஸ், வெஸ்ட் கோஸ்ட், விஸ்கான்சின், மிசோரி ஆகியவற்றிலும் ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
ஆனாலும், அமெரிக்காவில் நாள்தோறும் கரோனாவில் பாதி்க்கப்படுவோரில் 99 சதவீதம் பேர் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT