Published : 01 Dec 2021 06:23 PM
Last Updated : 01 Dec 2021 06:23 PM

ஒமைக்ரான் டெல்டாவை விஞ்சும் வாய்ப்புள்ளதா?- தென் ஆப்பிரிக்க ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

ஒமைக்ரான் வைரஸ் டெல்டை வைரஸ் தாக்கத்தை விஞ்சுவதற்கான வாய்ப்புள்ளதாக தென் ஆப்பிரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கரோனா பரவல் குறைந்துகொண்டிருக்கும் வேளையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வேற்றுருவம் (Variant) கண்டறியப்பட்டுள்ளது. ‘ஒமைக்ரான்’ (Omicron) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின் மரபணு வரிசையில் ‘B.1.1.529’ எனும் புதிய பிறழ்வு (Mutation) ஏற்பட்டுள்ளது.

ஒமைக்ரானால் தென்னாப்பிரிக்காவில் 300% அளவுக்கு கரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒரு வாரத்துக்குள் போட்ஸ்வானா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், இஸ்ரேல், இத்தாலி, செக் குடியரசு, ஹாங்காங், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

ஒமைக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா உடனான விமான சேவையை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க தேசிய தொற்று நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் ஏட்ரியன் பூரன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், டெல்டா வைரஸை எந்த வேற்றுருவாக்கம் பின்னுக்குத் தள்ளும் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்.

அதிகமாகப் பரவும் தன்மை கொண்ட புதிய திரிபு டெல்டாவை விஞ்சும் என நினைத்தோம். அது உண்மையானால், ஒமைக்ரான் வேகமாகப் பரவுமானால் அடுத்த சில நாட்களில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து அழுத்தம் அதிகமாகும். ஒமைக்ரான் தொற்று பரவி 4 வாரங்கள் முடியும் போது அது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விஞ்ஞானிகள் கணித்து விடுவர். மேலும், அது தடுப்பூசி எதிர்பாற்றல் கொந்தா என்பதும் உறுதியாகிவிடும் என்றார்.

இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோருக்கு வறட்டு இருமல், காய்ச்சல், இரவு நேர வியர்வை போன்ற மிதமான அறிகுறிகளே ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x