Published : 30 Nov 2021 08:18 AM
Last Updated : 30 Nov 2021 08:18 AM
ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து, அதைத் தடுக்கும் வகையில் அங்குள்ள மக்களுக்காக 100 கோடி தடுப்பூசிகளை சீனா அனுப்புகிறது.
தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரி்ட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
இதனால் உலக நாடுகள் தென்ஆப்பிரிக்காவிலிருந்து வருவோருக்கு ஏராளமான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்கும் வகையில் சீனா இன்னும் சர்வதேச விமானப் போக்குவரத்தைக் கூட தங்கள் நாட்டிலிருந்து தொடங்கவில்லை.
இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று அறிக்கை வெளியிட்டார்.
சீனா-ஆப்பிரிக்கா கூட்டுறவின் 8-வது மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் பேசுகையில், “ஆப்பிரிக்க நாடுகள் கரோனா வைரஸையும், உருமாறிய ஒமைக்ரான் வைரஸையும் எதிர்த்துப் போராடும் வகையி்ல் கூடுதலாக 100 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும்.
ஏற்கெனவே 60 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன, அதோடு சேர்த்து கூடுதலாக 100 கோடி தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். ஆப்பிரிக்க நாடுகளின் சுகாதாரத்தை ேமம்படுத்தும் வகையில் 10 சுகாதாரத் தி்ட்டங்களைச் செயல்படுத்தவும், 1500 மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT