Published : 11 Mar 2016 10:46 AM
Last Updated : 11 Mar 2016 10:46 AM
துருக்கியிலிருந்து கிரீஸுக்கு ஆப்கன், ஈரான் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, கடலில் மூழ்கியதில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான், ஈரான் அகதி களை ஏற்றிய படகு, துருக்கியி லிருந்து கிரேக்க தீவான லெஸ் போஸ் நோக்கிச் சென்று கொண் டிருந்தது. கடந்த புதன்கிழமை இரவு, துருக்கி நிலப்பரப்பிலிருந்து 500 மீட்டர் தொலைவில் மூழ்கும் நிலையில் படகை துருக்கி அதிகாரிகள் கண்டறிந்தனர்.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற கடலோரக் காவல் படை யினர், அப்படகிலிருந்த 9 பேரைக் காப்பாற்றினர். எனினும், அப்படகில் சென்றவர்களில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் நீரில் மூழ்கி பலியாயினர். மேலும் இருவரின் நிலை குறித்து தெரியவில்லை.
கடந்த திங்கள்கிழமை அகதிகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத் திடம் துருக்கி ஓர் திட்டத்தை முன்வைத்தது. இதன்படி, துருக்கி முகாமிலுள்ள சிரிய அகதிகளை ஐரோப்பிய ஒன்றியம் மறு குடியமர்வு செய்ய வேண்டும். அவ்வாறு மறு குடியமர்வு செய்யப்படும் ஒவ்வோர் சிரிய அகதிக்கும் ஈடாக, கிரீஸிலுள்ள சிரிய நாட்டவரை துருக்கி அழைத்துக் கொள்ளும்.
மேலும் கோடிக்கணக்கான டாலர்கள் நிதியுதவியையும் துருக்கி எதிர்பார்க்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT