Last Updated : 01 Nov, 2021 06:21 PM

 

Published : 01 Nov 2021 06:21 PM
Last Updated : 01 Nov 2021 06:21 PM

50 லட்சம் கரோனா மரணங்கள் சர்வதேச அவமானம்: ஐ.நா பொதுச் செயலாளர் கண்டனம்

தடுப்பூசியில் சமத்துவம் தேவை என ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று 50 லட்சத்தைக் கடந்தது.

இந்நிலையில் இது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்ரேஸ் பேசியிருப்பதாவது:

இன்று மனிதகுலம் 50 லட்சம் கரோன உயிரிழப்புகள் என்ற வேதனையான சிக்கலை சந்தித்துள்ளது. இது நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. வளம் மிக்க வளர்ந்த நாடுகள் எல்லாம் தங்கள் மக்களின் உயிர் காக்க மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், ஆப்பிரிக்க கண்டத்தில் இதுவரை மொத்தமே 5% பேருக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இது சர்வதேச அவமானம். இந்த 50 லட்சம் மரணம் என்ற எண்ணிக்கை அவமானச் சின்னம் மட்டுமல்ல எச்சரிக்கை மணியும். உலகில் ஒவ்வொருவரும் பாதுகாப்பாகும் வரையில் யாருமே பாதுகாப்பானவராக இருக்க முடியாது. இன்னும் உலகின் பல பகுதிகளில் கரோனா மரணங்கள் நடந்து வருகின்றன. மருத்துவமனைகள் கரோனா நோயாளிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. கரோனா பற்றிய வதந்திகள், தடுப்பூசி தட்டுப்பாடு, தடுப்பூசி பதுக்கல் ஆகியன இன்னும் அச்சுறுத்துகின்றன.

இத்தருணத்தில் உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து சர்வதேச அளவிலான தடுப்பூசிக் கொள்கையை வகுக்க விரும்புகிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் உலகில் உள்ள ஒவ்வொரு தேசத்திலும் குறைந்தது 40% மக்களாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக வேண்டும். 2022 பாதிக்குள் 70% மக்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இதன் அவசியத்தை அவசரத்தை உணர்த்து உலகத் தலைவர்கள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x