Published : 30 Oct 2021 02:48 PM
Last Updated : 30 Oct 2021 02:48 PM
இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சந்தித்து பேசினார்.
இத்தாலி தலைநகர் ரோமில் ஜி20 அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நேற்று காலை இத்தாலியின் ரோம் நகருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.
அங்கு உலகப் போர்களின்போது இத்தாலியில் போர் புரிந்த இந்திய வீரர்களின் நினைவைப் போற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் பிரதிநிதிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். உலகப் போர்களின் போது வீரத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி, சீக்கிய சமுதாயம் உள்ளிட்ட பல்வேறு சமூக உறுப்பினர்களுடன் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
#WATCH Prime Minister Narendra Modi arrives at G20 Summit venue in Rome. He is received by Italian Prime Minister Mario Draghi pic.twitter.com/Xlf97TgIUS
— ANI (@ANI) October 30, 2021
பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
போப் பிரான்சிஸ் - பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும், இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்த திட்டமிடப்பட்டதாகவும் அதேசமயம் ஒரு மணி நேரம் நீண்டதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, கோவிட், அமைதி, ஸ்திரத்தன்மை, பருவநிலை மாற்றம் மற்றும் பொது விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்தியாவிற்கு வர வேண்டும் என போப் பிரான்ஸிஸுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT