Published : 24 Oct 2021 03:29 PM
Last Updated : 24 Oct 2021 03:29 PM
தைவானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியது.
இதுகுறித்து அந்நாட்டு வானிலை மையம் தரப்பில், “தைவானின் கிழக்குப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவாகியது.இதன் ஆழம் 67 கிலோ மீட்டர் ஆகும். இந்த நில நடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கின” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
நில நடுக்கம் குறித்து தைவான் வாசி ஒருவர் கூறும்போது, “ வீட்டின் இரு சுவர்களும் குலுங்கின. நான் கடுமையான அதிர்வை உணர்ந்தேன்” என்றார்.
சுற்றுலாவாசி ஒருவர் கூறும்போது, "நான் மரணத்துக்காக பயந்தேன். எனக்கு இந்த அனுபவம் ரோலர் கோஸ்டர் மாதிரி இருந்தது" என்றார்.
தைவானில் 2018 ஆம் வருடம் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 17 பேர் பலியாகினர்.
1999 ஆம் ஆண்டு தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2,400 பேர் பலியாகினர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT