Published : 20 Oct 2021 07:05 PM
Last Updated : 20 Oct 2021 07:05 PM
பிரேசிலில் கரோனா தொற்றினை மோசமாக கையாண்ட பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா மீது குற்ற வழக்குபதிவு செய்யயும் பரிந்துரையை அந்நாட்டு எம்.பி.க்கள் குழு கொண்டு வந்துள்ளது.
கரோனா பிரேசிலில் தீவிரமாக இருக்கும்போது அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனோரா அறிவியல் ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்காமல், கரோனா குறித்து தவறான தகவல்களை மக்களிடத்தில் பதிவு செய்து வந்தார். மேலும், கரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியமற்றது எனத் தெரிவித்தார்.
ஜெய்ர் போல்சனோராவின் இந்தக் கருத்துகளுக்கு உலக அளவில் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில் ஜெய்ர் போல்சனோரா மீது பிரேசில் எதிர்க் கட்சி எம்பிக்கள் கொலை உட்பட 13 குற்ற வழக்குகளை பதிவு செய்து விசாரணையை நடத்த வேண்டும் என்று பரிந்துரையை கொண்டு வந்துள்ளனர்.
இந்த பரிந்துரை மீதான வாக்கெடுப்பு பிரேசில் நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.
உலக அளவில் கரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் கரோனா காரணமாக பிரேசிலில் வறுமை அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.
கரோனாவைப் பற்றிக் கவலைப்படாமல், முகக்கவசம் அணியாமல், மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஏற்கெனவே கூறிவந்தார். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT