Published : 18 Oct 2021 07:34 PM
Last Updated : 18 Oct 2021 07:34 PM

அமெரிக்க முன்னாள் வெளியுறவுச் செயலர் காலின் பாவல் கரோனாவால் காலமானார்: ஈராக் போருக்காக வருத்தம் தெரிவித்தவர்

அமெரிக்க முன்னாள் வெளியுறவுச் செயலர் காலின் பாவல் கரோனாவால் காலமானார். அவருக்கு வயது 84.

அமெரிக்காவின் முதல் கருப்பின வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமைக்குரியவர் காலின் பாவெல். பாவெலின் பெற்றோர் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க ராணுவத்தின் முப்படை தலைமை தளபதியாகவும் பனி புரிந்தவர் ஜெனரல் காலின் பாவெல்.
1991 ஆம் ஆண்டு வளைகுடா போருக்குப் பின்னர் பாவெலின் மதிப்பு அமெரிக்காவில் பல மடங்கு அதிகரித்தது. அவரை அதிபர் வேட்பாளராக அறிவிக்க மக்கள் ஆதரவுக்குரல் எழுப்பியது.

20 ஆம் நூற்றாண்டின் இறுதி, 21 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் என அமெரிக்க வெளியுறவு கொள்கையை வகுப்பதில் மிக முக்கியப் பங்காற்றியவர் காலின் பாவெல்.

காலின் பாவெலின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் சமூக ஊடகத்தில் பகிர்ந்த செய்திக் குறிப்பில், "நாங்கள், ஒரு அன்பான கணவரை, தகப்பனை, தாத்தாவை ஒரு நல்ல அமெரிக்கரை இழந்துவிட்டோம். காலின் பாவல் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியிருந்தார். இருப்பினும் அவருக்குக் கரோனா பாதித்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்" என்று தெரிவித்துள்ளது.
காலின் பாவெலுக்கு அல்மா என்ற மனைவியும், மிச்செல், லிண்டா மற்றும் ஆன் மேரி என்ற குழந்தைகளும் உள்ளனர்.

வருத்தம் தெரிவித்த பாவெல்:

ஈராக்கில் பேராபத்து அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. சதாம் உசேன் கொல்லப்பட்டார். ஆனால், பின்னர் ஈராக்கில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அப்படி ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னாளில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஈராக் போருக்கான நியாயத்தை எடுத்துரைக்க முடியாமல் பாவெல் திணறினார். அது குறித்து ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு அவர் ஒருமுறை அளித்தப் பேட்டியில், "அது ஒரு கருப்புப் புள்ளி. எனது வரலாற்றில் எப்போதும் அது இருக்கும். அது அப்போதும் வேதனை அளித்தது. இப்போதும் வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x