Published : 10 Oct 2021 11:46 AM
Last Updated : 10 Oct 2021 11:46 AM
லெபனானின் முக்கிய மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் நாடே இருளில் மூழ்கியுள்ளது.
இதுகுறித்து லெபனான் அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஜஹ்ரானி மின் நிலையத்தில் உள்ள தெர்மோ எலக்ட்ரிக் ஆலை நிறுத்தப்பட்டது மற்றும் டீர் அம்மர் ஆலையும் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.
நாட்டின் முக்கிய இரண்டு மின் நிலையங்களிலும் பணிநிறுத்தம் காரணமக மின் நெட்வொர்க்கின் ஸ்திரத்தன்மையை நேரடியாக பாதித்து முழுமையாக செயலிழந்துவிட்டது. தற்போது உடனடியாக செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் சாத்தியம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் தரப்பில், “ எரிபொருள்கள் முற்றிலுமாக தீர்ந்ததலால் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மின் உற்பத்தி தொடங்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், லெபனான் இராணுவம் 6,000 கிலோ லிட்டர் எரிவாயு எண்ணெயை இரண்டு மின் நிலையங்களுக்கு சமமாக விநியோகிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும், இதன் மூலம் மூன்று நாட்களுக்கு லெபனான் மின் தேவையை நிறைவேற்ற முடியும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதால், லெபனான் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT