Published : 05 Oct 2021 08:02 PM
Last Updated : 05 Oct 2021 08:02 PM

உலக வெப்பமயமாக்கல்; சுமார் 14% பவளப் பாறைகள் அழிந்துள்ளன: ஆய்வில் தகவல்

10 ஆண்டுகளில் உலக வெப்பமயமாக்கல் காரணமாக சுமார் 14% பவளப் பாறைகள் அழிந்துள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பவளப் பாறைகள் ஆரோக்கிய அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “ தெற்காசிய, பசிபிக், அரேபியன் பெனிசிலா, ஆஸ்திரேலியா ஆகிய கடல் பகுதிகளில் உள்ள பவளப் பாறைகள் உலக வெப்பமயமாக்கல் காரணமாக அழிந்து வருகின்றன. 10 ஆண்டுகளில் அதாவது 2009 - 2018ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சுமார் 14% பவளப் பாறைகள் உலக வெப்பமயமாக்கல் காரணமாக அழிந்துள்ளன.

இந்த நிலை மேலும் தொடர்ந்தால் நீருக்கடியில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் இறக்கக்கூடும். காலநிலை மாற்றம் தற்போது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. 73 நாடுகளில் 12,000 பகுதிகளில் பவளப் பாறைகள் அழிந்துள்ளன” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகள் காலநிலை மாற்றம் குறித்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரான கிரெட்டா துன்பெர்க்கும் இதையேதான் வலியுறுத்தி வருகிறார்.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.

எனவே, உலக வெப்பமயமாக்கலைத் தடுக்க, வளர்ந்த நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x