Last Updated : 05 Oct, 2021 06:31 PM

 

Published : 05 Oct 2021 06:31 PM
Last Updated : 05 Oct 2021 06:31 PM

வரலாற்றில் முதன்முறை: படப்பிடிப்புக்காக சர்வதேச விண்வெளி மையத்துக்குப் பறந்த ரஷ்ய இயக்குநர், நடிகை

வெளிநாட்டுப் படப்பிடிப்புகளை எல்லாம் பழைய கதையாக்கியுள்ளார் சூட்டிங்குக்காக விண்வெளிக்குச் சென்ற ரஷ்ய இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ.

ரஷ்யாவின் புகழ்பெற்ற இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ. இவர் எடுத்து வரும் படத்திற்கு தி சேலஞ்ச் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை, விண்வெளியில் ஏற்படும் ஒரு மருத்துவ நெருக்கடி தொடர்பானது.

இந்தப் படத்திற்காக இயக்குநர் க்ளிம் ஷிபென்கோ, நடிகை ஜூலியா பெரெஸ்லிட், விண்வெளி வீரர் ஆன்டன் ஷ்கேப்லெரோவ் ஆகியோர் விண்வெளிக்குப் புறப்பட்டனர்.

கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து சோயூஸ் MS-19 ராக்கெட் மூலம் அவர்கள் விண்வெளிக்குச் சென்றனர்.

இது குறித்து இயக்குநர் சிபிஎஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இவ்வாறு செய்வதன் மூலம் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ராஸ்காஸ்மோஸ், மேற்கத்திய நடிகர்கள் யாரும் இத்தகைய படப்பிடிப்பை விரும்பினால் அதற்கும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இப்போதைக்கு இப்படியொரு திட்டம் இல்லை என சிபிஎஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஆயினும், ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூயிஸ் இதுபோன்றதொரு விண்வெளி படப்பிடிப்பை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ரஷ்ய திரைப்படம் தி சேலஞ்ச் குறித்து நடிகை பெரஸில்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எங்களுக்கு படப்படப்பாக இருக்கிறது. அதனால் நாங்கள் ஒருவொருக்கொருவர் ஊக்குவித்துக் கொள்கிறோம். இதுவரை திரைத்துறையில் யாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது. எந்த ஒரு விஷயத்திலும் முன்னோடியாக இருப்பது மிகவும் கடினமானது. அதேவேளையில் மிகவும் சுவாரஸ்யமானது" என்று தெரிவித்துள்ளார்.

தி சேலஞ்ச் படக்குழு மொத்தம் 12 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் படப்பிடிப்பு நடத்துகிறது. அவர்கள் சோயூஸ் எம்எஸ் 18 விண்களம் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள். அப்போது அவர்களுடன் ஓலெக் நோவிட்ஸ்கி என்ற விண்வெளி வீரரும் தனது 190 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்புகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x