Published : 02 Oct 2021 01:24 PM
Last Updated : 02 Oct 2021 01:24 PM

நான் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டேன்: ஐ.நா. பொதுச்சபை தலைவர் அப்துலா சாஹீத்

தான் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாக ஐ.நா. பொதுச்சபை தலைவர் அப்துலா சாஹீத் தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியை இன்னும் பல ஐரோப்பிய நாடுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுவந்தாலும் கூட அவர்களுக்கு கட்டயமாக தனிமைப்படுத்துதலை அமலில் வைத்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை தங்கள் நாட்டுக்குள் நுழைய பிரிட்டன் அரசு தடை விதித்து வருகிறது.

இந்நிலையில் அண்மையில் நடந்த ஐ.நா. பொதுச்சபையின் 76 வது வருடாந்திரக் கூட்டத்தின் தலைவராக இருந்த அப்துல்லா ஷாஹீத் தான் 2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகாவும், புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளது.தான் கோவிஷீல்டு போட்டுக் கொண்டது குறித்து அப்துல்லா "நான் இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். எத்தனை நாடுகள் இதனை ஏற்றுக் கொண்டது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், உலகளவில் பெரும்பாலானோர் இந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். அதனால் நானும் செலுத்திக் கொண்டேன். நான் நலமுடனேயே இருக்கிறேன். இதில் ஏதும் பாதிப்பு இருக்குமா என்பதை மருத்துவர்கள் சொல்வார்கள்" என்று கூறினார்.

இன்னும் அதிகமான கோவிட் தடுப்பூசிகளை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அவர் இவ்வாறு கூறினார்.

இந்தியா இதுவரை 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு 66 மில்லியன் கரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. மாலத்தீவு மட்டும் 3.12 லட்சம் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனுக்கு பதிலடி:

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட போதிலும், இந்தியாவுக்கு வரும் பிரிட்டன் பயணிகள் 10 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. ஆனால், இவற்றில் சில தடுப்பூசிகள் மட்டுமே சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளன. இந்த தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே பல்வேறு நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டன்அங்கீகரித்துள்ளது. இருந்தபோதிலும், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை தங்கள் நாட்டுக்குள் நுழைய பிரிட்டன் அரசு தடை விதித்து வருகிறது.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, வரும் 4-ம் தேதி முதல் பிரிட்டனில் இருந்து வரும் பயணிகள், எந்த கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்த போதிலும், அவர்கள் 10 நாள் கட்டாய தனிமையில் வைக்கப்படுவார்கள் என இந்தியா அறிவித்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x