Published : 25 Sep 2021 03:02 PM
Last Updated : 25 Sep 2021 03:02 PM
ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க தைரியமான மற்றும் வலுவான அர்ப்பணிப்பை பாகிஸ்தான் காட்ட வேண்டும் என்று மலாலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி தூதுவர் யூசப் மலாலா கூறும்போது, “ பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடாகும், ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் பாகிஸ்தானின் எல்லையையும் அடைகிறது என்பதை நாங்கள் அறிவோம், அது பாகிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் பெண்கள் மற்றும் சமூகங்கள் மற்றும் பெண்களின் உரிமைகளையும் பாதிக்கிறது.
ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்சினை மட்டும் இல்லை, பாகிஸ்தான் உட்பட ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்சினையாக பாகிஸ்தான் பார்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க தைரியமான மற்றும் வலுவான அர்ப்பணிப்பை பாகிஸ்தான் காட்ட வேண்டும்” என்றார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இதுவரை எந்த ஒரு நாடும் ஆப்கானிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. இருப்பினும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்ததில் இருந்தே பாகிஸ்தான் தொடர்ச்சியாக உலக நாடுகள் ஆப்கனுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
அதேபோல் தலிபான்கள் அனைத்து தரப்பினையும் உள்ளடக்கிய ஆட்சியை அமைக்காவிட்டால் உள்நாட்டுப் போர் உருவாகும் என்றும் எச்சரித்து வருகிறது.
இதற்கிடையில் தலிபான்கள் அமைச்சரவையை விரிவாக்கம் செய்துள்ளனர். புதிய அமைச்சரவையில் மொழிவாரியான சிறுபான்மையினர் சிலருக்கும் இணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT